Monday, April 14, 2008

புதுவருடம்

மலர்ந்ததோ புதுவருடம்- ஆனால்
தொடருவதோ போருலகம்

துடிக்கின்றோம் நிமிடமெல்லாம் எதற்காக
வாழ்வதற்கா? வழித்துணைக்கு

நமக்குமேல் ஒரே கடவுள்
நடத்துகின்ற நாடகமா இது

நிச்சயமாக இல்லை - மனித
நாடகத்தின் ஒரு வடிவமே இது

பேராசை குடிகொண்ட பே்தையர்கு-மாற்றான்
பொன் ஆசை
பொருள் ஆசை
நிலத்தாசை

இதுக்காக ஏனிந்த உயிராசை?

அடுத்தவனை அழித்தொழித்து
அங்கு அரசமைத்து ......


எதற்காக இந்த ஒத்திகைகள்!!
மக்களின் வாழ்க்கையை சூறையாடி
சொந்த நாட்டையே ஏலமிட்டு
்வேடிக்கை காட்டும் மன்னர்களின்
நாடக ஒத்திகை!!

மன்னர்களுக்கோ கொண்டாட்டம்
மக்களுக்கோ திண்டாட்டம்

இலங்கைகுயின் விடிவு
மக்கள் கைகளிலே-அன்றி
மன்னர்கள் கைகளில் அல்ல


தங்கத்தில் மிதப்பவர்கு தெரியுமோ
தாகத்தின் அருமை

நாட்டு மக்களே ஒன்று படுங்கள்
அடுத்தவனை நம்முள் ஒருவனே
என்று நன்றே செய்யுங்கள்
நாளை நமதே!!
நாடும் நமதே!!

வரும்........

Monday, February 25, 2008

சற்று சிந்திப்பாயா.............

மனிதா...........!
சற்று சிந்திப்பாயா
இனம் என்று முளை விட்டது?
இன்றும் நடகிறது ஆராய்ச்சி
மொழி எதற்காக.....?
மொழி என்ரு கூவி சண்டை பிடிக்கவா
மதம் எதற்காக.....?
மதம் கொன்டு நெறி கெட்டு அழியவா

சற்று சிந்தியுங்கள் தோழர்களே

மனிதன் நல்ல வழியில் வாழ
ஓரு மார்க்கம் மதம்

மனிதன் மனிதனை விளங்கிக்கொள்ள
ஓரு ஊடகம் மொழி

இதுதான் உண்மை-ஆனால்
உலகில் மொழிகளோ பல இனங்களும் பல
முன்னோரை சொல்லி குற்றம் இல்லை
எது நியதியோ அது நடந்து விட்டது......

காலத்தால் அழியாத இனமாக மனித இனம் திகழ
காலத்தை வீணடித்து உயிர்கள் மாய்க்கப்படுகின்றன

மனிதனாக இருக்க முடியாதா மனிதா
பார் உனை நன்றாகவே பார்
உயிருக்கு எவழவு இடம் கொடுத்தாய் மனதில்

காடுங்கள் அன்பு
பூடுங்கள் வெறி (இன, மத...)
விலக்குங்கள் அறியாமை
கிடைகும் விடுதலை

உங்கள் நிலை உணர்ந்து நடை மாறுங்கள்
நாட்டில் சாந்தி நிட்சயம் மக்கள் சுபீட்சம் நிட்சயம்

பூமித்தாயின் வயிற்றில் நாமெல்லோரும் ஒரு மக்களே
மானிடராய் பிறந்துவிட்டு பேதையர் போல் வெறியாட்டம்

எது நிஜம்
மதம் ஒரு நல்ல மார்கம்
இனம் வம்சம் பிறப்பால்
மொழி மூச்சு பேச்சு

ஒருவனை ஒருவன் மதித்து விட்டால்
விடியும் வாழ்வு வழமுடன்

என்று நமெல்லோரும் ஒரு மக்கள் என்று உணர்ந்து மனம் ஒதுக்கொள்கிறதோ
அன்று ஒவ்வொரு இனமும் மதமும் ஏன் மனித இனமே விடுதலை பெறும்

வரும்