Tuesday, June 26, 2007

வேள்வித்தீ

தமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு
வேதம் உயிர் நாதம்

பக்க பலம் நல்ல கல்வி
பெற்ற வரம் கற்ற கரம்
பெரிய வெற்றி அரிய வீரர்
அரிய குணம் தானம் அவதானம்


ஆனால் தமிழா எங்கு ஊனம்
வேண்டா மனம்....!
ஐயம் பயம் பணம் ....!
வேகம் சந்தேகம்!

வாழ்வு உயர நல்ல மனம் ஒன்று போதுமே
என்ன பலன் ஏது பயன் விடுக பயம்
களவு மறைய -சுதந்திர
தாகம் தணிய பாவம் அகல
வறுமை ஒழிய கருணை பொழிய
வரவு உயர பெருமை பெருக

எழுக எழுக எழுக ! தெளிவு பெறுக !
வெற்றி நமதே......! மேன்மை நமதே...!
காலம் தரும் நல்ல வான்பார்த்த பூமி!

அங்கு ஒன்றே குலம்
என்ற பண்பே குணம்
வேறு எங்கே இந்த மரபு
பாரில் வேறு எங்கே இந்த உறவு
அம்மா அப்பா பிள்ளை மாப்பு உறவு
யாரும் ஒன்றே இங்கு...!

தலம் சென்று வலம் வந்த பலன் கிட்ட
கடல் ஓரம் வீசும் காற்று சுகம் கிட்ட
மெல்ல வரும் மழலை கீதம் பொழிய
காதல் கானம் கனிவுடன் கேட்க
பாரும் போற்றிப் புகழ வாழ்வே வளம் பெறும்
இதுவே நமது உறுதி நியதி

இன்றே வருக நன்றே செய்க
முடிவு நம் கையில் -நமது
விடிவும் நம் கையில்

ஆசைக் கனவு தமிழ் விடுதலை..........!
நீண்ட கனவு!
இனிய தமிழ்!
வாழிய தமிழ்!
வளர்க புகழ் !
அணிக தங்கச்சரம்......!

வாரீர் வாரீர் வாரீர் .......!
எழுந்து வாரீர்

--------------வரும்------------
லக்கி(தெல்லியூர்)

Monday, June 25, 2007

வாழ்க்கை

வாழ்க்கை எனும் நாடகத்தில்
நாம் எல்லோரும் நடிகர்கள்

காலம் நம்ம எதிரி -நல்ல
காலம் அதில் உதிரி
பாவம் நம்ம சோகம் -
அகம்பாவம் நம்ம ரோகம்

யாருக்கு புரியும் பந்த பாசம்
யாருக்கு புரியும் சொந்த நேசம்

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ....?
சொந்தங்கள் பந்தங்கள் என்றொரு கடல்

நினைத்தால் இனிக்கும்.......
மனம் பறக்கும்
இன்பம் கிடைக்கும்

அம்மா

நெஞ்சுக்குள் வாழும் இதயமே
நீதானே என்தன் சொந்தம்- அம்மா

பற்றும் பாசமும் கொண்ட உன்னை
சித்தம் இனித்திட நித்தம் நினைத்திடுவோம்

கனிவோடு எமை காக்கும் அன்னை நீயம்மா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எமக்குரைத்த தாயம்மா

நீ இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழவிடு
நான் என்ற அகந்தை விடு நாம் என்று மாறி விடு

கேள்வி தான் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்தென்று
ஏன் எதற்கு எப்படி ...!யார் யாருக்கு எப்போது...!
கேட்டுவிடு உன்னிடமே பார் போற்ற வாழ்ந்திடுவாய்
என்ருரைத்த தாயே உன்பாதம் போற்றி போற்றி!

யாரிந்த மக(ன்/ள்) என்று உலகு கேட்கும் அளவிற்கு
எம்மை உருவாக்கிட எம் உழைப்பவசியம்
கற்றறிந்த கல்வி பெற்ற பல அனுபவம் -கொண்டு
நம்மை மெருகூட்டிட உன் கருணை அவசியம்

இந்த ஞாலத்தில் உன்னை விட பெருமை யாருக்கம்மா
எந்த காலத்திலும் பொன்னைவிட பெருமை யாருக்கம்மா

காசிருந்தால் நினைத்ததை வாங்கலாம் இந்த காலத்தில்-ஆனால்
அன்னை உன்னை எது இருந்தாலும் வாங்கமுடியுமா

உன் பெருமை போற்றிட ஏது வார்த்தை அம்மா
எம் பெருமைக்கு வித்திட்ட உன்னை வாழ்த்த
கோடி வார்தை கூட போதாதம்மா....!

--------------வரும்------------
லக்கி(தெல்லியூர்)