Thursday, February 26, 2009

மாயை

மாயை......

ஏன் இந்த வாழ்க்கை-இது
யார் தந்த வாழ்க்கை


காலம் கலி காலம்-அதில்
மக்கள் பலிக் கோலம்

மக்களின் கொலைக்களம் - சில
பேய்களின் களிப்பிடம்


இனத்தை வேறறுக்க - பல
வெறியாட்டம் நரியாட்டம்


மாற்றான் அழிவைக் கூறி
நடக்கும் நயவ சக நாடகம்
அதுவே அழிவுக்கன அடித்தளம்
முடிவிற்கு முதல்ப் படி

உரிமையின் நிலையோ ?

விடியாத இரவாக
கழியாத கனவாக
தணியாத தாகமாக
முடியாத முடிவாக

நீதியின் விலங்குப்பிடியில்
நீதியோ நரிகளின் கைப்பிடியில்


நடப்பதெல்லாம் மயையன்றோ!

ஆனால்......!

உலமே அழி ந்(த்)தாலும்
உறையாது உரம்
மறையாது இனம்
குறையாது குணம்
!

<<<<<வரும்>>>>>

Monday, April 14, 2008

புதுவருடம்

மலர்ந்ததோ புதுவருடம்- ஆனால்
தொடருவதோ போருலகம்

துடிக்கின்றோம் நிமிடமெல்லாம் எதற்காக
வாழ்வதற்கா? வழித்துணைக்கு

நமக்குமேல் ஒரே கடவுள்
நடத்துகின்ற நாடகமா இது

நிச்சயமாக இல்லை - மனித
நாடகத்தின் ஒரு வடிவமே இது

பேராசை குடிகொண்ட பே்தையர்கு-மாற்றான்
பொன் ஆசை
பொருள் ஆசை
நிலத்தாசை

இதுக்காக ஏனிந்த உயிராசை?

அடுத்தவனை அழித்தொழித்து
அங்கு அரசமைத்து ......


எதற்காக இந்த ஒத்திகைகள்!!
மக்களின் வாழ்க்கையை சூறையாடி
சொந்த நாட்டையே ஏலமிட்டு
்வேடிக்கை காட்டும் மன்னர்களின்
நாடக ஒத்திகை!!

மன்னர்களுக்கோ கொண்டாட்டம்
மக்களுக்கோ திண்டாட்டம்

இலங்கைகுயின் விடிவு
மக்கள் கைகளிலே-அன்றி
மன்னர்கள் கைகளில் அல்ல


தங்கத்தில் மிதப்பவர்கு தெரியுமோ
தாகத்தின் அருமை

நாட்டு மக்களே ஒன்று படுங்கள்
அடுத்தவனை நம்முள் ஒருவனே
என்று நன்றே செய்யுங்கள்
நாளை நமதே!!
நாடும் நமதே!!

வரும்........

Monday, February 25, 2008

சற்று சிந்திப்பாயா.............

மனிதா...........!
சற்று சிந்திப்பாயா
இனம் என்று முளை விட்டது?
இன்றும் நடகிறது ஆராய்ச்சி
மொழி எதற்காக.....?
மொழி என்ரு கூவி சண்டை பிடிக்கவா
மதம் எதற்காக.....?
மதம் கொன்டு நெறி கெட்டு அழியவா

சற்று சிந்தியுங்கள் தோழர்களே

மனிதன் நல்ல வழியில் வாழ
ஓரு மார்க்கம் மதம்

மனிதன் மனிதனை விளங்கிக்கொள்ள
ஓரு ஊடகம் மொழி

இதுதான் உண்மை-ஆனால்
உலகில் மொழிகளோ பல இனங்களும் பல
முன்னோரை சொல்லி குற்றம் இல்லை
எது நியதியோ அது நடந்து விட்டது......

காலத்தால் அழியாத இனமாக மனித இனம் திகழ
காலத்தை வீணடித்து உயிர்கள் மாய்க்கப்படுகின்றன

மனிதனாக இருக்க முடியாதா மனிதா
பார் உனை நன்றாகவே பார்
உயிருக்கு எவழவு இடம் கொடுத்தாய் மனதில்

காடுங்கள் அன்பு
பூடுங்கள் வெறி (இன, மத...)
விலக்குங்கள் அறியாமை
கிடைகும் விடுதலை

உங்கள் நிலை உணர்ந்து நடை மாறுங்கள்
நாட்டில் சாந்தி நிட்சயம் மக்கள் சுபீட்சம் நிட்சயம்

பூமித்தாயின் வயிற்றில் நாமெல்லோரும் ஒரு மக்களே
மானிடராய் பிறந்துவிட்டு பேதையர் போல் வெறியாட்டம்

எது நிஜம்
மதம் ஒரு நல்ல மார்கம்
இனம் வம்சம் பிறப்பால்
மொழி மூச்சு பேச்சு

ஒருவனை ஒருவன் மதித்து விட்டால்
விடியும் வாழ்வு வழமுடன்

என்று நமெல்லோரும் ஒரு மக்கள் என்று உணர்ந்து மனம் ஒதுக்கொள்கிறதோ
அன்று ஒவ்வொரு இனமும் மதமும் ஏன் மனித இனமே விடுதலை பெறும்

வரும்

Thursday, July 19, 2007

விழா ஏற்பாட்டுக்குழுவுக்கு ஒரு மடல்

உதயதரிசனம்!
அன்பை கொண்டாடு உந்தன் நெஞ்சமே
இந்தபூலோகம் உந்தன் சொந்தமே
பிறந்தநாளை பெருவிழாபோல்
கொண்டாடும் நபர்கள் கவனத்திற்கு!
அழைப்புக்கு நன்றி-வருந்துகிறேன்!
இது நிதர்சனம்!
எமது தமிழ் இனத்தின் இன்றைய நிலையில்
இம்மாதிரியான விழாக்கள் தேவைதானோ! (அழகில்லை)
எனக்கு மனதில் பட்டதை சொன்னேன்
அவளவுதான்ஆனால் ஆர்ப்பாட்டம் அற்ற
விழாக்களை வரவேற்கிறேன்

பிறர் நலன் விரும்பி

Tuesday, June 26, 2007

வேள்வித்தீ

தமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு
வேதம் உயிர் நாதம்

பக்க பலம் நல்ல கல்வி
பெற்ற வரம் கற்ற கரம்
பெரிய வெற்றி அரிய வீரர்
அரிய குணம் தானம் அவதானம்


ஆனால் தமிழா எங்கு ஊனம்
வேண்டா மனம்....!
ஐயம் பயம் பணம் ....!
வேகம் சந்தேகம்!

வாழ்வு உயர நல்ல மனம் ஒன்று போதுமே
என்ன பலன் ஏது பயன் விடுக பயம்
களவு மறைய -சுதந்திர
தாகம் தணிய பாவம் அகல
வறுமை ஒழிய கருணை பொழிய
வரவு உயர பெருமை பெருக

எழுக எழுக எழுக ! தெளிவு பெறுக !
வெற்றி நமதே......! மேன்மை நமதே...!
காலம் தரும் நல்ல வான்பார்த்த பூமி!

அங்கு ஒன்றே குலம்
என்ற பண்பே குணம்
வேறு எங்கே இந்த மரபு
பாரில் வேறு எங்கே இந்த உறவு
அம்மா அப்பா பிள்ளை மாப்பு உறவு
யாரும் ஒன்றே இங்கு...!

தலம் சென்று வலம் வந்த பலன் கிட்ட
கடல் ஓரம் வீசும் காற்று சுகம் கிட்ட
மெல்ல வரும் மழலை கீதம் பொழிய
காதல் கானம் கனிவுடன் கேட்க
பாரும் போற்றிப் புகழ வாழ்வே வளம் பெறும்
இதுவே நமது உறுதி நியதி

இன்றே வருக நன்றே செய்க
முடிவு நம் கையில் -நமது
விடிவும் நம் கையில்

ஆசைக் கனவு தமிழ் விடுதலை..........!
நீண்ட கனவு!
இனிய தமிழ்!
வாழிய தமிழ்!
வளர்க புகழ் !
அணிக தங்கச்சரம்......!

வாரீர் வாரீர் வாரீர் .......!
எழுந்து வாரீர்

--------------வரும்------------
லக்கி(தெல்லியூர்)

Monday, June 25, 2007

வாழ்க்கை

வாழ்க்கை எனும் நாடகத்தில்
நாம் எல்லோரும் நடிகர்கள்

காலம் நம்ம எதிரி -நல்ல
காலம் அதில் உதிரி
பாவம் நம்ம சோகம் -
அகம்பாவம் நம்ம ரோகம்

யாருக்கு புரியும் பந்த பாசம்
யாருக்கு புரியும் சொந்த நேசம்

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ....?
சொந்தங்கள் பந்தங்கள் என்றொரு கடல்

நினைத்தால் இனிக்கும்.......
மனம் பறக்கும்
இன்பம் கிடைக்கும்

அம்மா

நெஞ்சுக்குள் வாழும் இதயமே
நீதானே என்தன் சொந்தம்- அம்மா

பற்றும் பாசமும் கொண்ட உன்னை
சித்தம் இனித்திட நித்தம் நினைத்திடுவோம்

கனிவோடு எமை காக்கும் அன்னை நீயம்மா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எமக்குரைத்த தாயம்மா

நீ இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழவிடு
நான் என்ற அகந்தை விடு நாம் என்று மாறி விடு

கேள்வி தான் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்தென்று
ஏன் எதற்கு எப்படி ...!யார் யாருக்கு எப்போது...!
கேட்டுவிடு உன்னிடமே பார் போற்ற வாழ்ந்திடுவாய்
என்ருரைத்த தாயே உன்பாதம் போற்றி போற்றி!

யாரிந்த மக(ன்/ள்) என்று உலகு கேட்கும் அளவிற்கு
எம்மை உருவாக்கிட எம் உழைப்பவசியம்
கற்றறிந்த கல்வி பெற்ற பல அனுபவம் -கொண்டு
நம்மை மெருகூட்டிட உன் கருணை அவசியம்

இந்த ஞாலத்தில் உன்னை விட பெருமை யாருக்கம்மா
எந்த காலத்திலும் பொன்னைவிட பெருமை யாருக்கம்மா

காசிருந்தால் நினைத்ததை வாங்கலாம் இந்த காலத்தில்-ஆனால்
அன்னை உன்னை எது இருந்தாலும் வாங்கமுடியுமா

உன் பெருமை போற்றிட ஏது வார்த்தை அம்மா
எம் பெருமைக்கு வித்திட்ட உன்னை வாழ்த்த
கோடி வார்தை கூட போதாதம்மா....!

--------------வரும்------------
லக்கி(தெல்லியூர்)